இல் து பிரான்ஸ் : கனரக வாகனங்களே மாசடைவுக்கு முக்கிய காரணம்! - புதிய ஆய்வு!!

5 கார்த்திகை 2024 செவ்வாய் 08:23 | பார்வைகள் : 4700
இல் து பிரான்சுக்குள் பதிவாகும் மாசடைவில் 40% சதவீதமானவை கனரக வாகங்களினால் ஏற்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
மாசடைவை கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகர் பரிஸ் மற்றும் இல் து பிரான்சின் பல பகுதிகளில் மகிழுந்துகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக இந்த திங்கட்கிழமை முதல் பரிசின் சில பகுதிகளில் மகிழுந்து நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நைதரசன் ஒக்சைட் (dioxyde d'azote) மற்றும் PM10 வகையான மாசடைவை ஏற்படுத்துவதில் பெரும் பங்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனக்களுக்கு உண்டு எனவும், 43% சதவீதமான மாசடைவுக்கு குறித்த வாகனக்களே காரணம் எனவும், மகிழுந்து ஏற்படுத்தும் பாதிப்பு 20% சதவீதம் மட்டுமே எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.