கால்நடைகளில் பரவும் 'நீல நாக்கு' வைரஸ்... தடுப்பூசிகள் வாங்கும் பிரான்ஸ்..!

5 கார்த்திகை 2024 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 6105
பிரான்சில் அண்மை நாட்களாக 'நீல நாக்கு' (Fièvre catarrhale ovine) எனப்படும் ஒருவகை வைரஸ் பரவி வருகிறது.
ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளிடம் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் கால்நடைகளின் நாக்கு நீலம் அல்லது நாவல் நிறத்தில் மாறுவதுடன் உயிரிழப்பையும் சந்திக்கின்றன. பண்ணையாளர்கள் மிகவும் மனச்சோர்வடைந்துள்ளனர். இந்நிலையில், இதனை எதிர்கொள்ள தேவையான தடுப்பூசிகளை பிரான்ஸ் கொள்வனவு செய்ய உள்ளது. முன்னதாக 12 மில்லியன் தடுப்பூசிகளுக்கான கொள்வனவை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தற்போது மேலதிகமாக 2 மில்லியன் தடுப்பூசிகளை வாங்க உள்ளது.
'இந்த வேகமாக நோய்பரவலைக் கட்டுப்படுத்த - தடுப்பூசி போடும் பணியை விரைவாக மேற்கொண்டுள்ளோம்! மொத்தமாக 14 மில்லியன் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட உள்ளன' என விவசாயத்துறை அமைச்சர் Annie Genevard நேற்று திங்கட்கிழமை தெரிவித்தார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025