Paristamil Navigation Paristamil advert login

RER-E தொடரூந்து நிலையம் ஒன்றில் தகராறு ஒருவரின் கை துண்டிப்பு.

RER-E தொடரூந்து நிலையம் ஒன்றில் தகராறு ஒருவரின் கை துண்டிப்பு.

4 கார்த்திகை 2024 திங்கள் 10:10 | பார்வைகள் : 9344


இன்று 04/11) காலை 8 மணி அளவில் RER E  பயணிக்கும் தொடரூந்து நிலையங்களில் ஒன்றான Seine-et-Marne பகுதியில் உள்ள Ozoir-la-Ferrière  நிலையத்தில் இளையோர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரின் கை துண்டிக்கப்பட ஒருவரின் மண்டை ஓடு உடைக்கப்பட்டுள்ளது. என
 காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே 16 மற்றும் 17 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த தகராறில் மொத்தம் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவரின் கை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இன்னொருவரின் மண்டையோடு உடைக்கப்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன இதனைத் தொடர்ந்து பாதிப்படைந்த போக்குவரத்து சேவை சற்று மணி நேரங்களில் மீண்டும் வளமைக்கு திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்