இரண்டு வெவ்வேறு மீட்புப்பணிகள்... 160 அகதிகள் கடலில் இருந்து மீட்பு!

2 கார்த்திகை 2024 சனி 09:38 | பார்வைகள் : 5680
பிரான்சில் இருந்து பிரித்தானியா நோக்கி பயணித்த அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 31 - நவம்பர் 1 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட இரவில் இச்சம்பவம் Nord மற்றும் Pas-de-Calais ஆகிய இரு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளது. முதலாவது சம்பவம் Nord மாவட்ட கடற்கரை வழியாக படகொன்றில் 57 பேர் பயணித்த நிலையில் அவர்களை பிரெஞ்சு கடற்படையினர் மீட்டுள்ளனர்.
அச்சம்பவம் இடம்பெற்ற அதேவேளை, Pas-de-Calais மாவட்டத்தின் கடற்பிராந்தியம் வழியாக இரண்டு படகுகளில் 103 பேர் பயணித்துள்ளனர். அவர்களை பிரித்தானிய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 60 அகதிகள் இதுபோன்ற ஆபத்தான கடற்பயணங்களில் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025