RER B தொடருந்து மோதி ஒருவர் பலி!
30 ஐப்பசி 2024 புதன் 12:45 | பார்வைகள் : 18687
RER B தொடருந்து மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். Aulnay-sous-Bois நிலையத்தில் இச்சம்பவம் ஒக்டோபர் 29, நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
தொடருந்து நிலையத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்ததாக தெரிவிக்கப்படும் நபர் ஒருவரை தொடருந்து மோதித்தள்ளியுள்ளது. நள்ளிரவு 12 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தண்டவாளத்தில் குறித்த நபர் நின்றிருந்தமைக்குரிய காரணங்கள் குறித்து அறிய முடியவில்லை.
இச்சம்பவத்தை அடுத்து போக்குவரத்து தடைக்கப்பட்டது. அதிகாலை 3 மணி வரை போக்குவரத்துக்கள் தடைப்பட்டன.


























Bons Plans
Annuaire
Scan