இரு வாரங்களின் பின்னர் மீண்டும் இயக்கப்படும் Transilien P சேவைகள்!

28 ஐப்பசி 2024 திங்கள் 16:49 | பார்வைகள் : 6739
Kirk புயலினால் பாதிக்கப்பட்ட Transilien P தொடருந்து சேவைகள், இரு வாரத்தின் பின்னர் இன்று ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகிறது.
Transilien P சேவைகள் Meaux, La Ferté-sous-Jouarre (Seine-et-Marne) மற்றும் La Ferté-Milon (Aisne) நகரங்களுக்கிடையே தடைப்பட்டிருந்தது. வெள்ளத்தினால் பல இடங்களில் தொடருந்து தண்டவாளங்கள் சேதமடைந்திருந்தது. அதை அடுத்து திருத்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன.
இந்த இரு வாரங்களும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். ஒருவழியாக திருத்தப்பணிகள் நிறைவடைந்து மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025