Paristamil Navigation Paristamil advert login

RER C தொடருந்து மோதி பெண் பலி!

RER C தொடருந்து மோதி பெண் பலி!

28 ஐப்பசி 2024 திங்கள் 11:16 | பார்வைகள் : 4639


RER C தொடருந்து மோதி 51 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் Igny (Essonne) நகரில் நேற்று ஒக்டோபர் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது.

நடைமேடையில் இருந்து தவறி விழுந்த குறித்த பெண்ணை தொடருந்து மோதியுள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு, அப்பெண்ணை மீட்டனர். ஆனாலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இரண்டுமணிநேரங்கள் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்