Paristamil Navigation Paristamil advert login

இரு மொழிக்கொள்கை; சாதிவாரிக் கணக்கெடுப்பு; மாநில பட்டியலில் கல்வி: த.வெ.க., அறிவிப்பு

இரு மொழிக்கொள்கை; சாதிவாரிக் கணக்கெடுப்பு; மாநில பட்டியலில் கல்வி: த.வெ.க., அறிவிப்பு

27 ஐப்பசி 2024 ஞாயிறு 14:26 | பார்வைகள் : 4849


விக்கிரவாண்டி த.வெ.க., மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

குறிக்கோள்
மதம், சாதி, நிறம், இனம், மொழி, பாலின அடையாளம், பொருளாதாரம் என்ற தனி அடையாளங்களுக்குள் மனித சமுதாயத்தை சுருக்காமல் தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களின் தனி மனித, சமூக பொருளாதார, அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தி எல்லோருக்கும் எல்லாமுமான சமநிலை சமூகம் உருவாக்குவது த.வெ.க., குறிக்கோள் ஆகும்

கொள்கைகள்

மதசார்பற்ற சமூக நீதி கொள்கைகள்

ஜனநாயகம்ஒரு நாட்டின் மக்களை அவர்கள் சா்ந்த இனம், மதம், மொழி, சாதி பாலினம் என்று பிரித்து பாகுபடுத்தாமல் சம உரிமைகளை அவர்களுக்கு உத்தரவாதப்படுத்தி சாத்தியப்படுத்துவது.


ஆட்சி அதிகாரம்சட்டம், நீதி, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தி வெகுஜன மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய,மாநில ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை எதிர்த்து மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவது


சமதர்ம சமூக நீதிவிகிதாச்சார இட பங்கீடு உண்மையான சமூக நீதிக்கு வழிவகுக்கும். ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சாதி முழுதும் ஒழிக்கும் காலகட்டம் வரை அனைத்து பிரிவினருக்கும் அனைத்து துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்குவது த.வெ.க.,வின் சமதர்ம சமூக நீதியாகும்


சமத்துவம்சாதி, மதம், இனம், நிறம், மொழி பொருளாதாரம், வர்க்கம், பாலின சமத்துவத்துடன் கூடிய உரிமை எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகரானவர்கள், பெண்கள்.3ம் பாலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் எல்லா வகைகளிலும் மக்களுக்கு சமம் ஆனவர்களே.


மதசார்பின்மைமதசார்பற்ற, தனிப்பட்ட மதநம்பிக்கையிலும் தலையீடற்ற, அனைத்து மதத்தவரையும், மத நம்பிக்கை அற்றவரையும் சமமாக பாவிக்கும் அரசு ஆட்சி நிர்வாகம் தான் நம்முடைய மதசார்பின்மை கொள்கை.


மாநில தன்னாட்சிமாநில தன்னாட்சி உரிமையே அந்தந்த மக்களின் தலையாய உரிமை. மாநில தன்னாட்சிக்கு உட்பட்ட உரிமைகளை மீட்பது என்பது த.வெ.க.,வின் தன்னாட்சி கொள்கை.


இருமொழி கொள்கைதாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழி கொள்கையை த.வெ.க., பின்பற்றுகிறது. தமிழே ஆட்சி மொழி.தமிழே வழக்காடு மொழி. தமிழே வழிபாட்டு மொழி. தமிழ் வழி கொள்கைக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.


அரசு மற்றும் தனியார் துறை எந்த துறையிலும் அரசியல் தலையீடு அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற நிர்வாகத்தை கொண்டு வருவோம். மதம், இனம், மொழி, வர்க்க பேதம் அற்ற வகையில் கல்வி சுகாதாரம் தூய காற்று தூய குடிநீர் என்பது எல்லாருக்குமான அடிப்படை உரிமை. சுற்றுச்சூழல் இயற்கை வளங்களை பாதுகாப்பது அரசின் தலையாய கடமை.


பகுத்தறிவு சிந்தனை மனப்பான்மை


மனித குலத்தின் உடல் மன குணநலனுக்கு கேடாக அமையும் வகையில் பிற்போக்கு சிந்தனைகளை நிராகரிப்பது.


தீண்டாமை ஒழிப்பு


பழமைவாத பழக்க வழக்கங்களை நிராகரிப்பதே தீண்டாமை ஒழிப்பின் முதல்படியாகும்.


இயற்கை வள பாதுகாப்புசூழலியல் மற்றும் கால நிலை நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடிய இயற்கைக்கு ஊறு வகுக்காத பகுதி சார் மாநிலம் வளர்ச்சி பரவலாக்கம்.


போதையில்லா தமிழகம்உற்பத்தி திறன், உடல், மற்றும் மன நலனை கெடுக்கும் சமூக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் போதை அறவே இல்லாத தமிழகம் படைத்தல் அடிப்படை கொள்கைகள் ஆகும்.


த.வெ.க.,வின் செயல்திட்டங்கள்

*நிர்வாக சீர்திருத்தம்அரசு மற்றும் தனியார் துறை எதுவாகிலும் அதில் அரசியல் தலையீடு எவ்வகையிலும் எந்த வடிவிலும் இருக்கவே கூடாது. லஞ்ச லாவண்யம், ஊழல் அற்ற நிர்வாகத்திற்கு வழிவகுக்கப்படும். ஜாதி, மதம் மற்றும் பாலின சார்பின்மை அரசு நிர்வாகத்தின் வழிகாட்டு வழிமுறைகளாக கடைபிடிக்கப்படும். அரசு நிர்வாகம் எப்போதும் முற்போக்கு சிந்தனையுடனும் பன்முகத்தன்மையுடனும் விளங்கும்.

* எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டு நெறிமுறைபடுத்தப்படும்


*மதுரையில் தலைமைச்செயலக கிளை அமைக்கப்படும்.


*சமூக நீதி மதசார்பின்மை கோட்பாடுகள் செயல்படுத்தப்படும். சமதர்ம சமத்துவ கோட்பாட்டிற்கும் சமூக நீதிக்கும் எதிரான வர்ணாசிரம கோட்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் அவற்றிற்கு முழு எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.


*சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் சமமான விகிதாச்சார இடப்பங்கீடு அளிக்கப்படும்.


*சாதி மதம் மற்றும் மொழி வழி சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சகோதரத்துவ சூழலை வழங்குவதுடன், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துடன் இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை சார்ந்த மக்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தப்படும்


*தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையே தமிழகத்திற்கு எப்போதும் ஏற்ற கொள்கை தமிழகத்தில் தமிழே ஆட்சி மொழி என்பது உறுதி செய்யப்படும்


*தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ள உறுதியான நடவடிக்கை எடுக்கப்டும்

*தமிழ் மொழியிலேயே ஆராய்ச்சி கல்வி வரை கற்கலாம் என்பதும் தமிழ் வழிக்கல்விக்கு அரசு வேலைவாய்ப்பில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பது உறுதி செய்யப்படும்


*கீழடி மற்றும் கொந்தகை சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கப்பட்டு பழந்தமிழரின் வைகை நாகரீகத்தை உலகிற்கு வெளிக்கொணர முன்னுரிமை அளிக்கப்படும்


*மாநில தன்னாட்சி உரிமை கொள்கைப்படி மருத்துவம் போலவே கல்வியும் மாநில பட்டியலுக்கு மாற்ற அழுத்தம் கொடுக்கப்படும்


*மாநில அரசுகளின் சுயமரியாதையை சீண்டும் கவர்னர் பதவியை அகற்ற வலியுறுத்தப்படும்


*தமிழக வெற்றி கழகத்தில் 3ல் ஒரு பங்கு கட்சி பதவிகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படும். படிப்படியாக அது உயர்த்தப்பட்டு 50 சதவீதம் என்ற நிலையும் எட்டப்படும். அனைத்து துறைகளிலும் ஆணுக்கு நிகராக பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும். பெண்கள் குழந்தைகள் முதியோர் பாதுகாப்புக்கு தனித்துறை ஒதுக்கப்படும்.


*மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட்டது போல் மாவட்டந்தோறும் மகளிருக்காக கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படும்


*மனித குல அழிவிற்கு வழிவகுக்கின்ற உடல் மன குணநலனுக்கு கேடாக அமையும் அறிவியல் சாராத சிந்தனைகள் முற்றாக நிராகரிக்கப்படும்.


*தீண்டாமை என்பது குற்றம். தீண்டாமையை கடைபிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்


*ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிநவீன வசதிகளை கொண்ட காமராஜர் மாதிரி பள்ளி ஒன்று உருவாக்கப்படும்.


*உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிகல்விக்கான தரம் உயர்த்தப்படும். தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறைக்கு என தனியாக பல்கலை உருவாக்கப்படும்


*மாவட்ட அளவில் அரசு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.


*அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேவையான மருத்துவ பரிசோதனை செய்யும் வகையில் தரம் உயர்த்தப்படும்.


*புற்றுநோய் போன்ற தீவிரமான நோய்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு மருத்துவமனை நிறுவப்படும்


*விவசாயிகளின் விற்பனை விலை, நுகர்வோர் வாங்கும் விலை இவற்றிற்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க அறிவியல் பூர்வமான முறை நடைமுறைப்படுத்தப்படும்


*நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள் விவசாய நிலங்கள் மீட்கப்படும்.


*அதிக கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள், நீர்த்தேக்கங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்படும்


*தமிழ் மரபு மொழி தொழிலான பனைத்தொழில் மேம்படுத்தப்படும். ஆவின் பாலகங்களில் கருப்பட்டி பாலும் வழங்கப்படும். பதநீர் மாநில பானமாக அறிவிக்கப்படும்.


*நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் அரசு ஊழியர்கள் வாரத்திற்கு இரு முறை கைத்தறி ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.


*பள்ளி மாணவர்கள் மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களின உடைகள் நெசவாளர்களிடம் இருந்து நேரடியாக அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை


*மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட அவர்கள் தயாரிக்கும் மண்பாண்ட பொருட்களை அரசு உணவகங்கள் மற்றும் விடுதிகளில் பயன்படுத்த நடவடிக்கை


*தமிழகத்தில் மணல் கொள்ளை, நிலத்தடி நீர் கொள்ளை, கனிம வள கொள்ளையை தடுக்க சிறப்பு சட்டம்


*மண்டல வாரியான துணை நகரங்கள் உருவாக்கப்படும்


*தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியம் செயல் இழந்து உள்ளது அந்த அமைப்பு சீரமைக்கப்படும்


*வன விலங்குகள், பறவைகள் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வன பரப்பளவு அதிகரிக்கப்படும்


*போதைப்பொருட்களை ஒழிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்