துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஐந்து வயதுச் சிறுவன்!

27 ஐப்பசி 2024 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 6791
ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளான். ஒக்டோபர் 26, நேற்று சனிக்கிழமை இச்சம்பவம் ரென் (Rennes) நகரில் இடம்பெற்றுள்ளது.
இரவு 10.30 மணி அளவில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மகிழுந்தில் பயணித்த தந்தை மற்றும் மகனை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இருவரும் காயமடைந்துள்ளனர். 5 வயதுச் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
30 வயதுடைய சிறுவனின் தந்தை முன்னதாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக சிறையில் அடைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.