அவதானம்.. நாளை தடைப்படும் Gare de l'Est நிலையம்..!

20 புரட்டாசி 2024 வெள்ளி 13:28 | பார்வைகள் : 9438
Gare de l'Est தொடருந்து நிலையம் நாளை செப்டம்பர் 21, சனிக்கிழமை தடைப்பட உள்ளது. பரிசில் இருந்து Reims நோக்கிச் செல்லும் TGV சேவைகள், Gare de Nord நிலையத்துக்கு அனுப்பட உள்ளன.
Gare du Nord நிலையத்துக்கு Roissy Charles de Gaulle விமான நிலையம் வழியாக சென்றடையும் எனவும், இதனால் மேலதிகமாக 15 நிமிடங்கள் பயண நேரம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (புகைப்படத்தைப் பார்க்கவும்)
இந்த தடை நாளை ஒருநாள் மாத்திரமே எனவும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்துக்கள் வழமை போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.