Paristamil Navigation Paristamil advert login

Montreuil : வீட்டில் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்..!!

Montreuil : வீட்டில் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டுகள்..!!

20 புரட்டாசி 2024 வெள்ளி 13:20 | பார்வைகள் : 5955


Montreuil (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றின் மீது செப்டம்பர் 17, செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளன. 

அறுபது வயதுகளையுடைய தம்பதியினர் இருவர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, அதிகாலை 4.30 மணிக்கு பாரிய சத்தத்துடன் துப்பாக்கி முழக்கம் கேட்டு அதிர்ச்சியுடன் எழுந்துள்ளனர். அவரது வீட்டின் முன்பக்கம் சுவர் மற்றும் கதவில் துப்பாக்கி குண்டுகள் துழைத்த அடையாளங்கள் இருந்துள்ளன. 

உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டு  தவகல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குண்டுகள் எங்கிருந்து வந்திருக்கும் எனும் கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்