38 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவை.. இன்று மாலை ஜனாதிபதியுடன் சந்திப்பு!

19 புரட்டாசி 2024 வியாழன் 16:06 | பார்வைகள் : 8073
புதிய அமைச்சரவையை அறிவிக்கும் பணிகளில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக 38 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பரிந்துரைத்துள்ளார்.
இன்று மாலை 7 மணிக்கு பிரதமர் Michel Barnier எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் பின்னர் அமைச்சரவை இறுதி வடிவம் பெறும் என அறிய முடிகிறது.
இதற்கு முன்னதாக, இன்று பகல் அரசியல் கட்சித்தலைவர்களுடன் பிரதமர் Michel Barnier, முக்கிய சந்திப்பு ஒன்றில் ஈடுபட்டார். ஒன்றரை மணிநேரம் இந்த சந்திப்பு நீடித்தது.
முன்னாள் பிரதமர்களான Édouard Philippe, Gabriel Attal உள்ளிட்டோருடனும் சந்திப்பு இடம்பெற்றது.
இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 38 அமைச்சர்கள் பட்டியலை தயாரித்துள்ளார் பிரதமர் Michel Barnier.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025