Rosny-sous-Bois : பெண்ணின் சடலம் மீட்பு... கணவர் கைது!
17 புரட்டாசி 2024 செவ்வாய் 05:26 | பார்வைகள் : 9424
Rosny-sous-Bois (Seine-Saint-Denis) நகரில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, கொல்லப்பட்ட அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டமப்ர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றதாகவும், 26 வயதுடைய பெண் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை. கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடற்கூறு பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும். கைது செய்யப்பட்ட நபர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
**
பிரான்சில் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு குடும்ப வன்முறை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் 94 பெண்களும், 2022 ஆம் ஆண்டில் 118 பெண்களும் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குடும்ப வன்முறையில் இருந்து பாதுகாக்க 3919 எனும் தொலைபேசி இலக்கத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan