தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.. RER B சேவை பாதிப்பு!
16 புரட்டாசி 2024 திங்கள் 16:15 | பார்வைகள் : 12163
எதிர்வரும் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
ஊழியர்கள் மீது SNCF மற்றும் RATP பாதுகாப்பு குழுவினரால் மேற்கொள்ளப்படும் பொருத்தமற்ற கட்டுப்பாடு மற்றும் தலையீடுகளைக் கண்டித்து CGT, FO, La Base மற்றும் UNSA ஆகிய தொழிற்சங்க ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இன்று செப்டம்பர் 16, திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அவர்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் துல்லியமாக, செப்டம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு 11 மணியில் இருந்து 25 ஆம் திகதி புதன்கிழமை காலை 6 மணி வரை இடம்பெற உள்ளது. அதன் போது RER B சேவை பிரதானமாக பாதிப்புக்கு உள்ளாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என SNCF தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan