Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீது  ஆளில்லா விமான தாக்குதல் நடத்தும் ரஷ்யா

உக்ரைன் மீது  ஆளில்லா விமான தாக்குதல் நடத்தும் ரஷ்யா

15 புரட்டாசி 2024 ஞாயிறு 03:17 | பார்வைகள் : 11029


உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானம் மூலம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

உக்ரைனின் 12 தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் 76 ஆளில்லா விமான தாக்குதல்களில் 72 ஐ சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களால் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.

இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவின் இத்தகைய தாக்குதல்களை எதிர்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி இம்மாத இறுதியில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

வர்த்தக‌ விளம்பரங்கள்