ரக்ஷன் வேட்டையன் மூலம் மீண்டும் வெளிச்சம் பெறுவாரா?
14 புரட்டாசி 2024 சனி 14:40 | பார்வைகள் : 6443
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில், குறிப்பாக விஜய் டிவியில் இருந்து பல பேர் வெள்ளித்திரையில் நுழைந்து நகைச்சுவை நடிகர்களாக, ஹீரோவாக தங்களுக்கு என ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னுதாரணம் என்றால் சந்தானம், சிவகார்த்திகேயனை சொல்லலாம். அதன்பிறகு தற்போது கவின் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகராக மாறி வருகிறார்.
இதே போல விஜய் டிவியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக பணியாற்றிய ரக்ஷன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் அவரது நண்பராக படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் இணைந்து நடித்திருந்தார். அவரது கதாபாத்திரமும் நகைச்சுவை கலந்த நடிப்பும் மிகவும் ரசிக்கும்படியாக வரவேற்பை பெற்றது.
ஆனால் அதற்கடுத்து தொடர்ந்து படங்களில் பிசியாக நடிப்பார் என எதிர்பார்த்தால் தற்போது வரை இந்த நான்கு வருடங்களில் மறக்குமா நெஞ்சம் என்கிற ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரக்ஷன்.
சமீபத்தில் இந்த படத்தில் இருந்து வெளியான மனசிலாயோ என்கிற பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல இந்த பாடலில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியருடன் இணைந்து அவர்களுக்கு இணையாக ரக்ஷன் நடனமாடியுள்ளார். அந்த அளவிற்கு ரக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த படத்தில் கிடைக்கும் வெளிச்சத்தை பயன்படுத்தி மீண்டும் தனக்கான ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் ரக்ஷன் உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan