தங்க தூளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

14 புரட்டாசி 2024 சனி 10:28 | பார்வைகள் : 8801
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 460 கிராம் நிறையுடைய தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட தங்க தூள் தொகையின் மொத்த பெறுமதி 2 கோடியே 50 இலட்சம் ரூபா ஆகும்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் அணிந்திருந்த ஆடையில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க தூள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3