Emily in Paris தொடரில் தோன்றும் முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன்!
11 புரட்டாசி 2024 புதன் 15:26 | பார்வைகள் : 10872
முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் நாடகம் ஒன்றில் தோன்றவுள்ளார். பிரபலமான Emily in Paris எனும் தொடரில் அவர் முதல் பெண்மணியாகவே தோன்றுகிறார்.
Netflix தளத்தில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில், நாளை 12.09.2024 வெளியாக உள்ள நான்காவது சீசனின் இரண்டாவது அத்தியாயத்தில் தோன்றுகிறார். குறித்த தொடரில் Darren Star எனும் பிரபலமான கதாப்பாத்திரம் ‘பிரிஜித் மக்ரோனை எலிசே மாளிகையில் வைத்து 2022 ஆம் ஆண்டு சந்தித்ததாக’ ஒரு காட்சியில் தெரிவித்ததை அடுத்து, அக்காட்சியை நனவாக்கும் திட்டத்தை செயற்படுத்தவே பிரிஜித் மக்ரோன் அழைக்கப்பட்டுள்ளார்.
பிரிஜித் மக்ரோன் இந்த தொடரின் தீவிரமான ரசிகர் என தெரிவிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கேட்டதும் நடிப்பதற்கு சம்மதித்துள்ளதாகவும், முதல்பெண்மணியாகவே அதில் தோன்றுவதாகவு, காட்சிக்கு என தனியே எந்த உடையும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan