பரிஸ் : வீடொன்றுக்குள் ஆயுத்ததுடன் நுழைந்த கொள்ளையர்கள்!

10 புரட்டாசி 2024 செவ்வாய் 18:16 | பார்வைகள் : 7457
பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், அங்கிருந்த ஒருவரை தாக்கி, கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் ஈஃபிள் கோபுரத்துக்கு அருகே உள்ள Avenue de la Bourdonnais வீதியில் இடம்பெற்றுள்ளது. பொருட்கள் விநியோகம் செய்யும் நபர்கள் போன்று உடை அணிந்திருந்த இரு கொள்ளையர்கள், வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த ஒருவர் கதவினை திறந்தபோது, அவரை வேகமாக உள்ளே தள்ளிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், குறித்த நபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரைக் கட்டிவைத்துவிட்டு, வீடு முழுவதும் சோதனையிட்டனர்.
அவர்களிடம் கைத்துப்பாக்கி ஒன்று இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் சில நிமிடங்களில் சில நூறு யூரோக்களை அங்கிருந்து கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1