பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மிதிவண்டியின் மின்கலன்!
10 புரட்டாசி 2024 செவ்வாய் 15:34 | பார்வைகள் : 7885
மின்சாரத்தில் இயங்கக்கூடிய மிதிவண்டி ஒன்று Chilly-Mazarin (Essonne) நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த நகரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.8) காலை 11 மணி அளவில் வெடிகுண்டு எச்சரிக்கை சமிக்ஞை எழுப்பட்டது. மிதிவண்டி ஒன்றில் நபர் ஒருவர் அங்கு வருகை தந்ததாகவும், மிதிவண்டியை நிறுத்திவிட்டு தங்குமிடத்துக்குள் நுழைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைக் கவனித்த ஸ்பெயினைச் சேர்ந்த இரு சுற்றுலாப்பயணிகள் அச்சமடைந்து, மிதிவண்டியில் பொருத்தப்பட்டிருந்த கறுப்பு நிற பெட்டியில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகித்து, உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு அகற்றும் குழுவினர் வந்தடைய அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
பின்னர் அது மிதிண்டிக்கான மின்கலன் (batterie) என தெரியவந்தது. அதை அடுத்து வெடிகுண்டு எச்சரிக்கை நீக்கப்பட்டது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan