மகாராஜா' பட இயக்குநரின் படத்தில் இணையும்நயன்தாரா...

10 புரட்டாசி 2024 செவ்வாய் 14:21 | பார்வைகள் : 7495
நித்திலன் சாமிநாதனின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாரா நடிப்பில் “மகாராணி” என்ற படத்தை இயக்கவுள்ளார் நித்திலன்.
“மகாராஜா” படத்தின் ரிலீசுக்கு முன்பே நயன்தாரா நடிக்கவுள்ள படத்தை இயக்க நித்திலன் ஒப்பந்தமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.மேலும் “மகாராஜா” படத்தை தயாரித்த ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் நயன்தாரா நடிக்கவுள்ள “மகாராணி” படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பலரும் “மகாராணி” என்று படத்தின் டைட்டில் வைக்க “மகாராஜா” படத்தின் வெற்றிதான் காரணமா என்றும் கேட்டு வருகின்றனர். நயன்தாராவின் “மகாராணி” படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1