பரிஸ் : கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி.,... பெண் கைது.!
10 புரட்டாசி 2024 செவ்வாய் 10:10 | பார்வைகள் : 8519
கட்டிடத்தில் இருந்து விழுந்து நபர் ஒருவர் பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Rue Darmesteter வீதியில் உள்ள கட்டிடன் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் இருந்து ஆண் விழுந்து பலியாகியுள்ளார். செப்டம்பர் 9 ஆம் திகதி மாலை 7 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உடனடியாக மருத்துவக்குழுவினர் தலையிட்டு அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோதும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை அடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், 40 வயதுடைய பெண் ஒருவரைக் கைது செய்தனர். அவரே காவல்துறையினரை அழைத்து தகவலையும் தெரிவித்ததாக அறிய முடிகிறது.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

























Bons Plans
Annuaire
Scan