Yvelines : கோரமான வீதி விபத்தில் இருவர் பலி... ஐவர் காயம்!

9 புரட்டாசி 2024 திங்கள் 13:07 | பார்வைகள் : 13700
செப்டம்ப 8, நேற்று ஞாயிற்றுக்கிழமை Épône (Yvelines) நகரில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த நகரை ஊடறுக்கும் D130 சாலையில் இரவு 11 மணி அளவில் அதிவேகமாக பயணித்த மகிழுந்து மற்றொரு வாகனத்துடன் மோதுண்டதாகவும், இதில் மகிழுந்து சாரதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாத குழந்தை ஒன்றும், 8 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் உள்ளிட்ட ஆறு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
விபத்துக்கு காரணம் அதிவேகப்பயணம் எனவும், விபத்து இடம்பெற்ற குறித்த பகுதி மணிக்கு 30 கி.மீ அதிகபட்ச வேகம் கொண்டது எனவும், விபத்தை ஏற்படுத்திய மகிழுழுந்து மணிக்கு 100 கி.மீ வேகத்துக்கு மேல் பயணித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1