Paristamil Navigation Paristamil advert login

பார்வையற்றோருக்கான உதைபந்தாட்டம்.. தங்கம் வென்ற பிரான்ஸ்..!

பார்வையற்றோருக்கான உதைபந்தாட்டம்.. தங்கம் வென்ற பிரான்ஸ்..!

8 புரட்டாசி 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 5498


பரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று சனிக்கிழமை பிரான்ஸ் தங்கம் வென்றது.

பார்வையற்றோருக்கான உதைபந்தாட்ட போட்டியில் பிரான்ஸ் அர்ஜண்டினா அணிகள் மோதின. 1-1 கோல்களை பெற்றுக்கொண்ட இரு அணிகளுக்கும் பெனால்டி வழங்கப்பட்டது. அதில் கோல் விளாசிய பிரான்ஸ் தங்கத்தை வென்றது. பிரான்சுக்கான 19 ஆவது தங்கப்பதக்கம்  இதுவாகும். 

பரா ஒலிம்பிக்கில் இதுவரை பிரான்ஸ் 19 தங்கம் உள்ளடங்கலாக மொத்தம் 74 பதக்கங்களை வென்றுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்