Évry-Courcouronnes : குழுமோதல்.. ஒருவர் படுகாயம்!

10 ஐப்பசி 2024 வியாழன் 14:14 | பார்வைகள் : 9034
Évry-Courcouronnes நகரில் நேற்று ஒக்டோபர் 9 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்ற குழு மோதலில், தலையில் தாக்கப்பட்டு ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நள்ளிரவை அண்மித்துக்கொண்டிருந்த வேளையில், Rue Rossini வீதியில் ஒன்றுகூடிய இரண்டு குழுவினர், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வருகை தருவதற்குள்ளாக, அவர்களில் ஒருவர் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டுள்ளார்.
மண்டையோடு சிதைவடைந்து, படுகாயமடைந்து, உயிருக்கு போராடும் நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1