ஷாருக்கானுடன் நடிக்க மறுத்த கமல் காரணம் என்ன?
10 ஐப்பசி 2024 வியாழன் 13:19 | பார்வைகள் : 5232
கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அடுத்தடுத்து பாலிவுட் திரை உலகின் பக்கம் சாய்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகர் சூர்யா பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ள நிலையில், ஜெயம் ரவியும் மும்பையில் தங்கி பாலிவுட் பட வாய்ப்புக்கு கொக்கி போட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு, ஷாருக்கானுக்கு இணையான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பை, கடந்த 2002 ஆம் ஆண்டு மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகநாயகன் கமலஹாசனை பொருத்தவரையில், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு நடிப்பதில் கைதேர்ந்தவர். இதுவரை அதிரடி ஹீரோ கதாபாத்திரத்தில் கலக்கி வந்த கமலஹாசன், இந்த ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாபச்சன், உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் வெளியான 'கல்கி 2898' திரைப்படத்தில், வில்லனாக நடித்திருந்தார். மேலும் இவருடைய கதாபாத்திரம் முதல் பாகத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் கமலஹாசனின் கதாபாத்திரம் மிகக் குறைந்த அளவிலேயே கட்டப்பட்டிருந்தாலும், இரண்டாவது பாகத்தில் கமலுக்கான காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கமலஹாசனை வில்லனாக நடிக்க வைக்க, கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் பரா கான் முயற்சித்த நிலையில், அந்த வாய்ப்பை கமல் நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி ஷாருக்கான் நடிப்பில், பரா கான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மெயி ஹூன் நா'. இந்த படத்தில் சுஷ்மிதாசன் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக கமலஹாசன் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய இயக்குனர் பரா கான் கமலஹாசனை சென்னையில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது தன்னுடைய அலுவலகத்திற்கு பரா கானை வர வைத்த கமல்ஹாசன், அவருக்கு அறுசுவை விருந்து கொடுத்து உபசரித்துள்ளார். ஹீரோவாக நடித்து வருவதால் வில்லன் கதாபாத்திரத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறியுள்ளார்.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பின்னர் திரையுலக வாழ்க்கையில் படு பிஸியாக இருக்கும் கமலஹாசன், தற்போது சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர், தன்னுடைய மருமகனும்... நாயகன் பட இயக்குனருமான மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வருகிறார். தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், கமல்ஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இதைத் தொடர்ந்து தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள 'அமரன்' திரைப்படத்தையும் கமலஹாசன் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan