Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

மிரட்டும் மில்டன் சூறாவளி! விண்வெளியில் இருந்து கிடைத்த பிரமிக்க வைக்கும் காட்சி

மிரட்டும் மில்டன் சூறாவளி! விண்வெளியில் இருந்து கிடைத்த பிரமிக்க வைக்கும் காட்சி

10 ஐப்பசி 2024 வியாழன் 10:03 | பார்வைகள் : 5468


நாசா விண்வெளி வீரர் மில்டன் சூறாவளியை விண்வெளியிலிருந்து படம்பிடித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து நாசா விண்வெளி வீரர் ஒருவர், மில்டன் புயலின் அளவு மற்றும் சக்தியை காட்டும் அழகான timelapse வீடியோ ஒன்றை படம்பிடித்துள்ளார்.

 செவ்வாய்க்கிழமை டிராகன் எண்டேவர்(Dragon Endeavor) என்ற விண்கலத்தின் ஜன்னலில் இருந்து இந்த ரம்மியமான காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

மேத்யூ டொமினிக் (Matthew Dominick) என்ற விண்வெளி வீரர் டிராகன் எண்டேவர் விண்கலத்தில் இருந்து இந்த காட்சிகளை பதிவு செய்துள்ளார். 

டிராகன் எண்டேவர் விண்கலம் ஒக்டோபர் 7 ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்து பூமிக்கு திரும்ப திட்டமிட்டு இருந்த நிலையில், மில்டன் சூறாவளி காரணமாக இந்த நடைமுறை  ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மில்டன் சூறாவளி வழியாக பறந்த போது அதன் பிரமிக்க வைக்கும் அளவு மற்றும் சக்தியை வெளிப்படுத்துவதற்காக விண்வெளி வீரர் டொமினிக் timelapse வீடியோ காட்சியை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவின் விவரத்தில், “ 2 மணி நேரத்திற்கு முன்பு மில்டன் சூறாவளி வழியாக timelapse காட்சிகளுடன் பறந்த போது என குறிப்பிட்டு 1/6400 sec exposure, 14mm, ISO 500, 0.5-sec interval, 30fps என கேமரா அமைப்பு நுணுக்கங்களையும் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி சுமார் 9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. அதில் பார்வையாளர் ஒருவர், கண்களால் நம்பமுடியாத காட்சி! என விவரித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்