விசேட செய்தி : காவல்துறையினரின் மகிழுந்துகளுக்கு தீ வைப்பு...!!
9 ஐப்பசி 2024 புதன் 13:55 | பார்வைகள் : 8201
பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியமான Vaucluse நகர காவல்நிலையம் ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மகிழுந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
இன்று ஒக்டோபர் 9., புதன்கிழமை காலை 5 மணி அளவில், குறித்த காவல்நிலையத்தின் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தை அடுத்து, காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஐவர் உடனடியாக வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறையும், 150,000 குற்றப்பணமும் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan