நிதி அளிப்புக்கு நன்றி சொல்ல பிரதமரை சந்திக்கும் உதயநிதி

8 ஐப்பசி 2024 செவ்வாய் 05:39 | பார்வைகள் : 5736
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடியை, துணை முதல்வர் உதயநிதி விரைவில் சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மூன்று வழித்தடங்களில் நடந்து வருகின்றன. இதற்கு, 63,246 கோடி ரூபாய் தேவை. மத்திய அரசு தன் பங்களிப்பை மூன்று ஆண்டுகளாக வழங்கவில்லை. இதனால், தமிழக அரசு நிதியில் பணிகள் நடந்து வந்தன.
நிதி பற்றாக்குறை காரண மாக, பணிகள் தாமதமாகும் நிலை ஏற்பட்டது. பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் சந்தித்து பேசினார்; மெட்ரோ ரயில் பணிகளுக்கு நிதி வழங்க வலியுறுத்தினார்.
இதையடுத்து, இத்திட்டத்திற்கு 7,425 கோடி ரூபாயை மத்திய அரசின் பங்களிப்பாக வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 33,593 கோடி ரூபாய் பன்னாட்டு வங்கி கடனுதவியும் பெற்று தரப்படுகிறது. இதன் வாயிலாக, மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு, 65 சதவீத பங்களிப்பை மத்திய அரசு வழங்குவது உறுதியாகிஉள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025