இலங்கையில் வருமான வரி நிலுவையில் உள்ளவர்களின் வீடுகளுக்குச் சென்று வசூலிக்கத் தீர்மானம்!
7 ஐப்பசி 2024 திங்கள் 14:59 | பார்வைகள் : 6108
இலங்கையில் வருமான வரி நிலுவையில் வைத்துள்ள தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, அவர்களிடமிருந்து இன்று முதல் அந்த வரிகளை வசூலிக்கத் தீர்மானித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் 1,417 பில்லியன் ரூபாய் வரி நிலுவையில் உள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது இந்த வருடத்தில் இலக்கிடப்பட்ட வருமானத்தின் 70 சதவீதமாகும்.
எனவே, வரி செலுத்தாத நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan