இஸ்ரேலின் ஹஃபா நகரம் மீது ஹெஸ்புல்லா அதிரடி தாக்குதல்
7 ஐப்பசி 2024 திங்கள் 08:11 | பார்வைகள் : 8490
இஸ்ரேல் நாடானது தீவிர தாக்குதலை காசா மீது மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில் ஹெஸ்புல்லா அமைப்பு முதன்முறையாக இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹஃபா மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் நூற்றுக்கணக்கான ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஹெஸ்புல்லா தாக்குதலில் ஹஃபாவில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இஸ்ரேலிய இராணுவம் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியமையினால் பெய்ரூட்டில் மீண்டும் ஒரு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இஸ்ரேல் , கடந்த சில நாட்களில் லெபனானின் தலைநகர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan