lycée Rosa Parks பாடசாலையில் கடமையில் ஈடுபடும் பிராந்திய பாதுகாப்பு படை!

5 ஐப்பசி 2024 சனி 13:10 | பார்வைகள் : 8636
lycée Rosa Parks உயர்கல்வி பாடசாலையைச் சேர்ந்த மாணவன் ஒருவர் சுத்தியலால் தாக்கப்பட்டதை அடுத்து, அங்கு நிரந்தரமாக பாதுகாப்பு கடமையில் ஈடுபட பிராந்திய பாதுகாப்பு படையினர் (brigade régionale de sécurité) பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
அங்கு பயிலும் மாணவர்களுக்கிடையே கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி குழு மோதல் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன் போது மாணவன் ஒருவன் தலையில் சுத்தியலால் தாக்கப்பட்டு உயிருக்காபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
அதை அடுத்து பாடசாலையின் வெளிப்புறத்தில் 68 கமராக்களும் உட்புறத்தில் 38 கராக்களும் பொருத்தப்பட உள்ளன.
அத்தோடு பிராந்திய பாதுகாப்பு படையினரையும் பணிக்கு அமர்த்தியுள்ளனர். இதற்காக €545,000 யூரோக்கள் முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025