பரிசில் நூதன கொள்ளையில் ஈடுபட்ட ஆறு பேருக்கு சிறை!!

5 ஐப்பசி 2024 சனி 06:20 | பார்வைகள் : 7958
ஓய்வூதியம் பெறும் 80 வயதுடைய பெண்மணி ஒருவரை நூதனமான முறையில் ஏமாற்றி, அவரிடம் இருந்து ஒரு மில்லியன் யூரோக்கள் பணத்தினை கொள்ளையிட்ட ஆறு பேர் கொண்ட குழுவுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
ஒரு பெண் உள்ளடங்கலாக ஆறு பேர் கொண்ட குழுவினர், Saint-Nom-la-Breteche ( Yvelines ) நகரில் வசிக்கும் பெண்மணி ஒருவரை நன்கு திட்டமிட்டு ஏமாற்றி பணத்தினை கொள்ளையிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளையன் ஒருவர் வங்கி முகவர் போன்று வேடமணிந்து, குறித்த முதியவரின் வீட்டுக்குச் சென்று, அவருடன் கதைத்து, நம்பவைத்துள்ளார். அத்துடன் அங்கிருக்கும் பொருட்கள், நகைகள், பணம் குறித்தும் தகவல் கேட்டறிந்துள்ளார்.
பின்னர் சில நாட்கள் கழித்து , ஆறு பேர் கொண்ட குழு அங்கு சென்று, அவரை ஏமாற்றி அவரின் வங்கியில் உள்ள பணத்தினை பிறிதொரு வங்கிக்கணக்கிற்கு மாற்றி, பணத்தை கொள்ளையிட்டுள்ளனர்.
அத்தோடு, வீட்டில் இருந்த விலை உயர்ந்த பாரசீக கம்பளங்களையும், சில நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர், நேற்று வெள்ளிக்கிழமை குறித்த ஆறு பேருக்கும் Versailles நகர குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1