கால்நடை வளர்பாளர்களுக்கு €75 மில்லியன் இழப்பீடு!!

4 ஐப்பசி 2024 வெள்ளி 14:26 | பார்வைகள் : 11221
கால்நடை பண்ணையாளர்களுக்கு €75 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக பிரதமர் Michel Barnier அறிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை காலை Cournon-d'Auvergne (Puy-de-Dôme) நகரில் ஆரம்பமான கால்நடைகளுக்கான கண்காட்சிக்கு (Salon de l'élevage) சென்றிருந்த பிரதமர் Michel Barnier, அங்கு வைத்து கால்நடை பண்ணையாளர்களைச் சந்தித்து உரையாடினார். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கடந்த சில மாதங்களாக செம்மறி ஆடுகளிடம் பரவிய வைரஸ் காய்ச்சலினால் பாரிய இழப்புகளைச் சந்தித்த பண்ணையாளர்கள், இழப்பீடு கோரிக்கையை முன் வைத்தனர்.
அதை அடுத்து, ஊடகங்களிடம் உரையாடிய பிரதமர், '€75 மில்லியன் யூரோக்கள் இழப்பீடு வழங்கப்படும்!' என அறிவித்தார்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025