பரிஸ் : அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு!!

2 ஐப்பசி 2024 புதன் 08:42 | பார்வைகள் : 6180
கத்தி ஒன்றின் மூலம் அரச அதிகார்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த ஒருவர் காவல்துறையினரால் சுடப்பட்டுள்ளார்.
பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள Boulevard de Belleville இல் இச்சம்பவம், நேற்று ஒக்டோபர் 1 ஆம் திகதி செவாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. மாலை 4 மணி அளவில் சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அங்கு நபர் ஒருவர் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு அரச அதிகாரிகளை அச்சுறுத்திக்கொண்டிருந்துள்ளார்.
அவரை சரணடையும் படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் அதற்கு மறுக்க, மின்சாரத் துப்பாக்கியினால் ஒரு தடவை சுடப்பட்டார்.
ஆனால் அதற்கு அவர் மசியவில்லை. அதை அடுத்து காவல்துறையினர் இரு தடவைகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கீழே விழுத்தினர்.
பின்னர் அவர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025