பரிஸ் : Louis Vuitton காட்சியறையில் கொள்ளை.. நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் மாயம்!

30 புரட்டாசி 2024 திங்கள் 14:46 | பார்வைகள் : 5627
இன்று திங்கட்கிழமை காலை பரிசில் உள்ள Louis Vuitton காட்சியறை கொள்ளையிடப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Boulevard Saint-Germain பகுதியில் அமைந்துள்ள காட்சியறையின் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், விலை உயர்ந்த பொருட்கள் பலவற்றை கொள்ளையிட்டுள்ளனர். கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மதிப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை.
கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளின் படி, முகக்கவசம் அணிந்த நான்கு கொள்ளையர்கள் காட்சியறைக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.