Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : உணவகம் ஒன்றில் கொள்ளை.. ஒருவர் படுகாயம்..!

பரிஸ் : உணவகம் ஒன்றில் கொள்ளை.. ஒருவர் படுகாயம்..!

30 புரட்டாசி 2024 திங்கள் 14:13 | பார்வைகள் : 6980


பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றில் உணவி பரிமாறும் ஒருவர் (serveur) படுமோசமாக தாக்கப்பட்டுள்ளார். 

பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் rue Baudricourt வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. வாடிக்கையாளர் போன்று உணவகத்துக்குள் நுழைந்த கொள்ளையன் ஒருவன், தனக்கான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்து, உணவு பரிமாறுபவர் ஒருவரை தாக்கிவிட்டு பொருட்கள் சிலவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

முகத்தில் தாக்குதலுக்கு இலக்கான அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

தாக்குதலாளி இதுவரை கைது செய்யப்படவில்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்