Paristamil Navigation Paristamil advert login

'தளபதி 69' படத்தின் கதை இதுவா?

'தளபதி 69' படத்தின் கதை இதுவா?

30 புரட்டாசி 2024 திங்கள் 09:09 | பார்வைகள் : 10199


தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தை எச் வினோத் இயக்கவிருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு முடிந்த பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக நாயகியாக நடிக்க மஞ்சு வாரியருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ’தளபதி 69’ திரைப்படம் என்பது விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படம் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையம்சத்துடன் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. தற்போது, இந்த கதை குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

’தளபதி 69’ திரைப்படத்தின் கதை விவசாய பிரச்சனைகளை பேசும் அரசியல் கதையாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'கத்தி' உள்ளிட்ட சில படங்களில் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ள நிலையில், விஜய் தற்பொழுது அரசியல் கட்சி தொடங்கியுள்ளதால், இந்த படத்தில் விவசாய பிரச்சினையை கொஞ்சம் அழுத்தமாகவே வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேவின் புரடொக்சன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம், தீபாவளி அன்று திரைக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்