அவதானம் நாளை périphérique மணிக்கு 50KM வேகத்திற்கு குறைகிறது.

30 புரட்டாசி 2024 திங்கள் 08:46 | பார்வைகள் : 8420
தலைநகர் பாரிசையும் அதை அண்டியுள்ள ஏனைய நகரங்களையும் இணைக்கின்ற 35 கிலோமீட்டர் நீளமான périphérique வீதி நாளை 01/10 முதல் மணிக்கு 70KM வேகத்தில் இருந்து, மணிக்கு 50KM வேகத்திற்கு குறைக்கப்படுகிறது. அதனை மீறி அதிக வேகத்தில் செல்வோருக்கு அபராதமும் அதேவேளை வேகத்திற்கு ஏற்ப புள்ளிகளும் சாரதி அனுமதி பத்திரத்தில் இருந்து எடுக்கப்படும்.
எற்கனவே மணிக்கு 50KM குறைக்கின்ற நடவடிக்கைகள் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் படிப்படியாக ஆரம்பிக்கப்படும் என பாரிஸ் நகர முதல்வர் Anne Hidalgo அறிவித்திருக்கிறார், அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் (01/10) வீதியின் வெவ்வேறு பகுதிகளில் கட்டம் கட்டமாக ஆரம்பமாகவுள்ள பரீட்சார்த்தப் போக்குவரத்து பின்னர் ஒக்ரோபர் 10 ஆம் திகதி முழு அளவில் நடைமுறைக்குவரும் என்று நகரசபை தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக Porte des Lilas மற்றும் Porte d'Orléans முனைகளுக்கு இடைப்பட்ட வீதியில் செவ்வாய்க்கிழமை வேகம் 50 கிலோ மீற்றர்களாக வரையறுக்கப்படும் தொடர்ந்து அடுத்தடுத்த முனைகளுக்கான வேக கட்டுப்பாடு கொண்டுவரப்பட உள்ளது ஏனைய விவரங்களை அறிந்து கொள்ள paristamil.com செய்தி தளத்தோடு இணைந்து இருங்கள்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1