லெபனான் பயணமாகியுள்ள பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்..!!

30 புரட்டாசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 7185
லெபனான் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அங்கு இடைக்கால போர்நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரான்ஸ், பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக கண்டனமும் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர் Jean-Noël Barrot, லெபனான் பயணமாகியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் லெபனான் தலைநகர் பெய்ரூட் நோக்கி பயணமாகியுள்ளார்.
இன்று திங்கட்கிழமை அவர் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து உரையாடுவதுடன், பல்வேறு மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு உறுதியளித்துவிட்டு, இன்று மாலை அங்கிருந்து மீண்டும் பிரான்சுக்கு திரும்புவார்.
ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் Hassan Nasrallah கொல்லப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு போரின் உக்கிரம் தீவிரமடைந்துள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025