துணை முதல்-அமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு - உதயநிதி ஸ்டாலின்

29 புரட்டாசி 2024 ஞாயிறு 04:32 | பார்வைகள் : 5674
தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக இன்று மாலை பதவியேற்க உள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில், இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ள அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.
இந்த நிலையில், துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!"
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025