ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் கண்ணீருடன் Philippine இன் இறுதிச் சடங்கு..!!

27 புரட்டாசி 2024 வெள்ளி 16:20 | பார்வைகள் : 11923
பரிசில் கொல்லப்பட்ட Philippine எனும் இளம் பெண்ணின் இறுதிச் சடங்கு இன்று Versailles (Yvelines) நகரில், பல ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் இடம்பெற்றது.
செப்டம்பர் 27, இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 1 மணி அளவில் Saint-Louis தேவாலயத்தில் இடம்பெற்றது. உறவினர்கள், பொதுமக்கள் என மொத்தமாக 2,800 பேர் அமைதியாக கூடி இந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
Paris-Dauphine பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த குறித்த மாணவி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு Bois de Boulogne பூங்காவில் புதைக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
Taha O எனும் 22 வயதுடைய மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025