Paristamil Navigation Paristamil advert login

ஜெயம் ரவி சென்னையை விட்டு செல்கிறாரா?

 ஜெயம் ரவி சென்னையை விட்டு செல்கிறாரா?

27 புரட்டாசி 2024 வெள்ளி 11:30 | பார்வைகள் : 4790


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி சென்னையை விட்டு செல்வதாகவும் அவர் மும்பையில் செட்டிலாக இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தனது மனைவியை பிரிவதாகவும் விவாகரத்து பெற இருப்பதாகவும் நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்ட நிலையில் தன்னிடம் கேட்காமலேயே விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டதாக அவருடைய மனைவி ஆர்த்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் பிரிவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று செட்டில் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அவர் மும்பைக்கு சென்ற நிலையில் அங்கு பத்திரிகையாளர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு அவர் சிரித்துக் கொண்டே பதில் அளித்தார்.

இந்நிலையில் பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் ஜெயம் ரவி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவருடைய புதிய அலுவலகம் மும்பையில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி மும்பையிலேயே அலுவலகத்தையும் தொடங்கிய நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவியும் மும்பையில் செட்டிலாக போகிறார் என்று கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்