பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

26 புரட்டாசி 2024 வியாழன் 14:20 | பார்வைகள் : 4916
பிரித்தானிய பிரஜை ஒருவரினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குஷ் போதைப்பொருள் ஒரு தொகுதியை கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
43 கிலோ மற்றும் 600 கிராம் எடை கொண்ட இந்த போதைப்பொருள், சுங்க வரலாற்றில் மிகப்பெரிய குஷ் போதைப்பொருள் சோதனை என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில் இந்த போதைப்பொருள் காணப்பட்டதாகவும் அவற்றின் பெறுமதி 44 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் பிரித்தானிய பாதுகாப்பு சேவை அதிகாரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025