Paristamil Navigation Paristamil advert login

 பசுபிக்சமுத்திரத்தில் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை  சோதனை - சீனா அறிவிப்பு

 பசுபிக்சமுத்திரத்தில் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணை  சோதனை - சீனா அறிவிப்பு

26 புரட்டாசி 2024 வியாழன் 09:38 | பார்வைகள் : 10835


பசுபிக்சமுத்திரத்தில் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணையை  சீனா பரிசோதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சீன நேரப்படி காலை 8.44 மணியளவில் போலி ஏவுகணை முகப்பை ஏந்தி ஐசிபிம் ஏவப்பட்டது.

அது பசுபிக் கடலின் உயரமான பகுதியில் விழுந்தது என சீனா தெரிவித்துள்ளது.

ஏவுகணையின் பயணப்பாதை அது தரையிறங்கிய இடத்தை சீனாவின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிடவில்லை.

சீனா இராணுவத்தின் ரொக்கட் படைப்பிரிவின் இந்த சோதனை நடவடிக்கை அதன் வழக்கமான வருடாந்திர பகுதியின் தொடர்ச்சியாகும் இது எந்த நாட்டையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இல்லை என சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  சீனாவின் இந்த பகிரங்க அறிவிப்பு அமெரிக்காவிற்கும் அதன் சகாக்களிற்கும் செய்தியொன்றை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்