இஸ்ரேலிலிருந்து பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்கள்

26 புரட்டாசி 2024 வியாழன் 08:29 | பார்வைகள் : 7907
இஸ்ரேல் நாடானது காசா மீது பாரிய தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இஸ்ரேலிலிருந்து பாலஸ்தீனியர்களின் சடலங்கள் அடங்கிய கொள்கலன்களை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் மீது காசா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
இஸ்ரேலில் இருந்து அனுப்பப்பட்ட 88 பாலஸ்தீனியர்களின் சடலங்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் வகையிலான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.
குறித்த சடலங்களைப் பெறுவதற்கு காசாவின் சுகாதார அமைச்சு மறுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலின் குறித்த நடவடிக்கையானது உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்துள்ளதாக காசா தெரிவித்துள்ளது.
அடையாளம் காண முடியாத நிலையில் சடலங்களை அனுப்புவதானது மனிதாபிமானமற்ற மற்றும் குற்றவியல் நடவடிக்கை எனவும் காசா சுட்டிக்காட்டியுள்ளது.