■ சீரற்ற காலநிலை.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

26 புரட்டாசி 2024 வியாழன் 05:25 | பார்வைகள் : 7164
மழை, வெள்ளப்பெருக்கு போன்ற சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று செப்டம்பர் 26 ஆம் திகதி வியாழக்கிழமை நண்பகலின் பின்னர் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யலாம் எனவும், Corrèze, Jura, Ain மற்றும் Haute-Savoie ஆகிய நான்கு மாவட்டங்களில் கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
மேற்குறித்த மாவட்டங்களில் 80 தொடக்கம் 100 மி.மீ வரையான மழை பதிவாகலாம் எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர்.
ஆறுகளில் தண்ணீர் அதிகரித்து நிரம்பி வழியலாம் எனவும், மண் சரிவு ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரைகளில், குளக்கரைகளில் நிற்கவோ, பயணிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
****
அதேவேளை, பரிஸ் உள்ளிட்ட இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025