மனைவி ஆர்த்தி மீது, ஜெயம் ரவி காவல் நிலையத்தில் கொடுத்த பரபரப்பு புகார்!

25 புரட்டாசி 2024 புதன் 07:35 | பார்வைகள் : 7814
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருப்பதும், அவருக்கும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருக்கும் இடையிலான நெருக்கம் குறித்தும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அடையாறு போலீஸ் துணை கமிஷனர் அவர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனுவில் “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் கடற்கரை சாலையில் உள்ள தனது மனைவி வீட்டில் இருந்து தனக்கு சொந்தமான உடமைகளை மீட்டுத்தர வேண்டும் “என்று கூறப்பட்டுள்ளது.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர் நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி போலீசார் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1