Paristamil Navigation Paristamil advert login

இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது..

இயக்குனர் மோகன் ஜி அதிரடி கைது..

24 புரட்டாசி 2024 செவ்வாய் 09:54 | பார்வைகள் : 7745


இயக்குனர் மோகன் ஜி தமிழக காவல்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார், இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரௌபதி’, ’பகாசுரன்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி, சமீபத்தில் அளித்த பேட்டியில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலந்திருப்பதாக மோகன் ஜி பேட்டி அளித்திருந்த நிலையில், இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை காசிமேடு இல்லத்தில் மோகன் ஜியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் மோகன்ஜியை திருச்சி எஸ்.பி. வருண் குமார் உத்தரவின் பேரில் சென்னை ராயபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இன்று காலை மோகன் ஜியை காவல்துறை அதிகாரிகள் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்ததாகவும், விசாரணைக்கு பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்