லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல் - 492 பேர் பலி
24 புரட்டாசி 2024 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 11882
லெபனானில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு லெபனானில் கிராமங்கள், நகரப் பகுதிகள் உள்பட மொத்தம் 19 இடங்களை ஹிஸ்புல்லா ஆயுதக்குழுக்கள் ஆயுதக் கிடங்குகளாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள வரைபடத்தில் கண்டறியப்பட்டது.
இதனால், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 35 குழந்தைகள் உட்பட 492 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,645 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan